விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு

விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு

விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் தனிப்பிரிவு மனு பதிவேடு, முதியோர் உதவித் தொகை, நிலக்குத்தகை, தீ விபத்து, இயற்கை இடர்பாடு, தடையாணை, வருவாய் வசூல் சட்டப் பதிவேடு, வழக்கு கோப்பு, தபால், பகிர்மானம், பட்டா மாறுதல், வருகை, தற்செயல் விடுப்பு, விலையில்லா வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகள் மற்றும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதே போன்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் சார்பில் செயல்பட்டு வரும் ஆதார் மையமும் பார்வையிடப்பட்டது. மேலும், 7 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 1.65 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலை, 4 பயனாளிகளுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனைப் பட்டா ஆணை என 11 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 2.05 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், அலுவலகங்களில் உள்ள அனைத்து பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும் தங்களது தொடர்புடைய பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதில், வருவாய் கோட்டாட்சியர் மு. வடிவேல்பிரபு, வட்டாட்சியர் என். செல்வவிநாயகம், துணை வட்டாட்சியர் ஜெ. சதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com