அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மைய காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் தொடக்கம்

அரியலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் சனிக்கிழமை தொடங்கியது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் சனிக்கிழமை தொடங்கியது.
ஆட்சியரக அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலை ஆட்சியர் க.லட்சுமிபிரியா பார்வையிட்டு, தெரிவித்ததாவது:
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 407 பணியிடங்களை நிரப்ப 3.8.1017 முதல் 17.8.2017 வரை 2790 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், வயது வரம்பு, கல்வித் தகுதி, சாதி சுழற்சி மற்றும் ஒருவர் ஒருமுறைக்குமேல் விண்ணப்பித்தது போன்ற காரணங்களுக்காக 120 மனுக்கள் தள்ளுப்படி செய்யப்பட்டன.
மீதம் உள்ள தகுதி வாய்ந்த 2,670 மனுதாரர்களுக்கு நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டது. தகுதிவாய்ந்த மனுதாரர்களுக்கான நேர்காணல் 19.8.2017, 20.8.2017 மற்றும் 21.8.2017 ஆகிய மூன்று நாள்கள் ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
அழைப்பாணை கிடைக்க பெற்ற விண்ணப்பதாரர்கள் உரிய நேரத்தில் நேர்காணல் அழைப்பில் குறிப்பிடப்பட்ட உரிய ஆவணங்கள் (அசல்) மற்றும் அழைப்பாணை கடிதத்துடன் நேர்காணலுக்கு ஆஜராக வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான நாள் மற்றும் நேரம் அவர்களது செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது.
நேர்முக தேர்வில் கலந்துகொள்பவர் அனைவரும் பெண்கள் என்பதால் நிறைமாத கர்ப்பிணி மற்றும் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே உதவியாளர் அனுமதிக்கப்படுவர். மேற்படி பணிகளுக்கு விண்ணப்பம் செய்து தேர்வுக்கு நேரடி அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் மாவட்ட திட்ட அலுவலகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் அரியலூர், தொலைபேசி 04329 - 228 550 என்ற எண்ணில் அவர்களது பெயர், விண்ணப்பித்த பதவி விவரம் விண்ணப்பித்த தேதி போன்ற விவரத்தை தெரிவித்து தகுதியின்மைக்கான விவரத்தை அறிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
இந்தநேர்காணலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வராணி, கோட்டாட்சியர்கள் மோகனராஜன் , டினாகுமாரி, வட்டாட்சியர்கள் முத்துகிருஷ்ணன், திருமாறன், தேசிய தகவலியல் அலுவலர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com