விராலிமலை வட்டார விவசாயிகளுக்கு பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி

விராலிமலை வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

விராலிமலை வட்டாரத்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் பண்ணைக் கழிவு மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
விராலிமலை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம் மண்டையூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட நத்தக்காடு கிராமத்தில் பண்ணைக் கழிவுமேலாண்மை பற்றிய பயிற்சிக்கு வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளரும் வேளாண்மை உதவி இயக்குநருமான ந. கண்ணன் தலைமை வகித்தார்.
இதில், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் செல்வி பங்கேற்று, பண்ணைக் கழிவுகளைச் சேகரித்து மக்க வைத்தல் மற்றும் அதில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், மக்கிய உரத்தின் சத்துகளின் அளவு, நன்மைகள் பற்றியும், மக்கிய உரப் பயன்பாடு பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். முன்னதாக வட்டார தொழில் நுட்பமேலாளர் த. லட்சுமிபிரபா வரவேற்றார்.
பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு தொழில்நுட்பக் கையேடு, குறிப்பேடு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பொ. சுப்பிரமணி, ந. உமாமகேஸ்வரி செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com