புராணங்களைக் கற்பதைவிட வரலாற்றை அறிவதே மேல்: கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்

கோயில்களில் உள்ள ஸ்தல புராணங்களை படிப்பதை விட கோயில்கள்  உருவான வரலாறு குறித்து கற்றலே மேன்மை தரும் என்றார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.

கோயில்களில் உள்ள ஸ்தல புராணங்களை படிப்பதை விட கோயில்கள்  உருவான வரலாறு குறித்து கற்றலே மேன்மை தரும் என்றார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.
புதுக்கோட்டையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் புதன்கிழமை இரவு பங்கேற்று சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற தலைப்பில் மேலும் அவர் பேசியது:
பல்வேறு ஊர்களில் உள்ள கோயில்களில் நல்லதங்காள் கிணறு உள்ளது. அப்படியென்றால் ஊருக்கு ஊரு நல்லதங்காள் இருந்திருக்கிறார்கள் என்றே அர்த்தம்.  குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட இசக்கிமுத்துக்கள் வடிவத்தில் அது இன்னமும் தொடர்கிறது. காலம்தோறும் நல்லதங்காள்கள் நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குற்றங்களுக்கான தண்டனை கூட மனுதர்மத்தின் அடிப்படையிலே வழங்கப்படுகிறது.
கீழத்தஞ்சையின் வாய்மொழி வரலாறு மிக முக்கியமானது. இன்றைய கேரள அரசு பெண்களின் மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்திருக்கிறது. ஆனால், கீழத்தஞ்சையில் பெண்களின் பிரசவத்திற்கே ஒருநாள் தான் விடுப்பு தரப்பட்டுள்ளது. அறுத்துப் போட்ட தொப்புள்கொடியின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே அவர்கள் வயலில் இறங்கி களையெடுத்தாக வேண்டும்.  வரலாறு நெடுகிலும் பெண்களுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டே வந்திருக்கிறது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின் மார்புக்குக்கூட வரிபோடப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது. 58 வயதான ராணிமங்கம்மாள், தன் மகனாலேயே உணவின்றி வீட்டுச் சிறையில்  வைக்கப்பட்டு உயிரிழந்தார். தற்போது கீழடியில் தமிழனின் பெருமைமிகு வரலாறு எழுந்து நிற்கிறது. கீழடி முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டால் இந்திய வரலாறு வைகை கரையில் இருந்து எழுதப்படும் என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலாதாப்பர். 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழன் நாகரிக வாழ்வை வாழ்ந்திருக்கிறான். தண்ணீரைச் சுத்திகரித்து அருந்தியிருக்கிறான். தொழிற்சாலை வைத்து இருக்கிறான். இந்த வரலாற்றை மண்மூடி மறைக்கும் வேலையில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு மாநில அரசும் துணைநிற்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com