அமரகண்டான் ஊருணியிலுள்ள பாசிகளை அகற்ற வலியுறுத்தல்

பொன்னமராவதி அமரகண்டான் ஊருணியில்  படர்ந்திருக்கும் குழித்தாமரை பாசிகளை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதி அமரகண்டான் ஊருணியில்  படர்ந்திருக்கும் குழித்தாமரை பாசிகளை அகற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலர் ஏனாதி ஏஎல்.ராசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுமார் 10 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஊருணியின் தண்ணீரை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ஊருணி முழுவதும் குழிதாமரை பாசிகள் படர்ந்துள்ளதால் தண்ணீரை பயன்படுத்த
மக்கள் தயங்குகின்றனர்.
எனவே, உடனடியாக இந்த ஊருணியில் படர்ந்துள்ள குழிதாமரை பாசிகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊருணியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,
 நடைபாதை பயிற்சி மேற்கொள்வோருக்காக நடைபாதைச் சாலை மற்றும் சிறுவர்பூங்கா அமைக்க வேண்டும்.
மேலும்,  பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் அமரகண்டான் குளத்தின் தென்கிழக்கு கரை எதிரே உள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில்
அடிக்கடி விபத்துகள் நேரிடுவதை தடுக்க உடனடியாக ரவுண்டானா அமைக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com