புதுகை நகராட்சி அலுவலகம் முற்றுகை

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி  ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி

புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தாமதமின்றி  ஊதியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி  துப்புரவுத் தொழிலாளர்கள்  செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லையாம்.  இதற்கு நிதிப் பற்றாக்குறையே காரணமென அலுவலர்கள் தரப்பில் பதில் அளிக்கப்படுகிறதாம்.
இந்நிலையில் கடந்த மாதத்துக்கான ஊதியத்தை இதுவரை வழங்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக  புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த ஜனநாயக துப்புரவுத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரையும் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்று அலுவலர்களைச் சந்திக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் தொழிலாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதைத்தொடர்ந்து நிர்வாகி விடுதலைக்குமரன் உள்ளிட்ட 5 பேர் நகராட்சி ஆணையர் (பொ) ஜெ.சுப்பிரமணியனை சந்தித்துப் பேசினர். அப்போது, சம்பளம் உடனே வவங்கப்படும் என ஆணையர் உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com