தேசியப் போட்டிகளில்  பதக்கம் வென்றவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

2016-17-ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அரசால்

2016-17-ம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அரசால் இலவசமாக வழங்கப்படும் விளையாட்டு உபகரணங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது:
2016-17 ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது பெயர், முழு முகவரி, சான்றிதழ்களின் நகல் ஆகிய விவரங்களுடன் வரும்  27-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டரங்கம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது 04322-222187, 74017 03498 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com