புதுகையில் திருமுறை மாநாடு: தேவார ஆய்வு நூல் வெளியீடு

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில்  சனிக்கிழமை தொடங்கிய நான்காம் ஆண்டு திருமுறை மாநாட்டில் ஞானசம்பந்தர் தேவார ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.

புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் சார்பில்  சனிக்கிழமை தொடங்கிய நான்காம் ஆண்டு திருமுறை மாநாட்டில் ஞானசம்பந்தர் தேவார ஆய்வு நூல் வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை  நகர்மன்றத்தில் நடைபெற்ற  திருமுறை மாநாட்டை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் சீர்வளர்சீர் சிவபிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார் . தொடர்ந்து, திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தொகுத்த தமிழ் ஞானசம்பந்தர் தேவாரம் ஆய்வுரைகள் எனும் நூலை  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்  வெளியிட்டுப் பேசினார்.
இதையடுத்து நடைபெற்ற ஆய்வரங்கில், ஞானசம்பந்தர் பெருமான் தேவாரத்தில் சிவநெறி எனும் தலைப்பில், சைவ அறிஞர் சொ.சொ.மீ. சுந்தரம்  பேசியது:
இறைவனது  ஐந்தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை செய்யக்கூடிய ஆற்றலை பெற்றவராக சிவபெருமானால் வருவிக்கவுற்றவர் ஞானசம்பந்த பெருமான். அதன்பிறகு வந்த வள்ளல் பெருமானும் அவ்வகை ஆற்றலை பெற்றவராக திகழ்ந்தார். இறைவனது அருளாற்றலை பெற்றவராக விளங்கி, அன்றைய தமிழ் மண்ணில் தனித்தமிழ் இயக்கம் கண்டு இறைமொழியாக தமிழை கூறிய பெருமை ஞானசம்பந்த பெருமானையே சாரும் என்றார். விழாவில், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சுப.திண்ணப்பன், திருமுறை மாநாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் எஸ். ராமதாஸ், பாரதி கல்விக் குழுமத் தலைவர் குரு. தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முனைவர் அய்க்கண் வரவேற்றார். கவிஞர் கதிரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மாநாட்டுக் குழுச் செயலாளர் இராம. வயிரவன் நன்றி கூறினார். விழாவில், பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
விழா சிறப்புடன் நடைபெற, தவத்திரு ஊரன் அடிகளார், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி,  ராமலிங்கர் பணி மன்றத் தலைவரும், சக்தி தொழில் குழுமச் செயல்தலைவருமான ம. மாணிக்கம், தமிழறிஞர் மறைலை இலக்குவனார், கவிஞர் பெ. சிதம்பரநாதன், தமிழாகரர் தெ. முருகசாமி ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com