"மாணவர்களின் படைப்புத் திறனை ஆசிரியர்கள் அங்கீகரிக்க வேண்டும்'

மாணவர்களின் படைப்புத் திறனை ஆசிரியர்கள் அங்கீகரித்து பாராட்ட வேண்டும் என்றார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.

மாணவர்களின் படைப்புத் திறனை ஆசிரியர்கள் அங்கீகரித்து பாராட்ட வேண்டும் என்றார் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம்.
புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில், அதன் தலைவர் கவிஞர் கதிரேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
பிறருக்கு கொடுப்பதில்தான் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறது. எனவே, வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி சமுதாயத்தில் நல்ல குடிமகனாகவும் மாணவர்களை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதைப்பெற்றுத் தருவதுதான் கல்வியின் வேலை. மாணவர்களிடம் கல்வியைத் திணிக்காமல், கற்றலில் அவர்களுக்கு தாகத்தை ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை. மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். தொழில் கல்வியோடு இலக்கியம், அறம் சார்ந்த நூல்களைப் படிக்க மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
கற்றல் என்பது எப்போதும் முடிந்துவிடக்கூடியதல்ல. அது தொடர் நிகழ்வு. அதற்கு ஏணிப்படியாக இருந்து மாணவர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருபவர்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் படைப்புத்திறனை ஆசிரியர்கள் அங்கீகரித்து பாராட்ட வேண்டும். தர்மமே தொழிலாகவும், தொழிலே தர்மமாகவும் இருப்பது ஆசிரியர் பணியில் மட்டும் தான் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, பேராசிரியர் மானசீகன் பேசினார். முன்னதாக,  கலை கார்த்திகேயன் ஆசிரியர்களுக்கு சுவாசம்,  தியானப் பயிற்சிகள் அளித்தார்.
கல்வியியல் கல்லூரித் தாளாளர் பி. கருப்பையா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் எஸ். கலியபெருமாள் வரவேற்றார். ஜோகன் அறக்கட்டளை நிறுவனர் டெய்சிராணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com