சாலைப் பணியாளர்கள் ஊர்தி பிரசாரம்

நெடுஞ்சாலைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஊர்தி பிரசாரம் திங்கள்கிழமை புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

நெடுஞ்சாலைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் ஊர்தி பிரசாரம் திங்கள்கிழமை புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
கோரிக்கைகள்: தமிழக அரசு நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். பொள்ளாச்சி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி கோட்ட நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும். நெடுஞ்சாலைகளில் சுங்கவரி வசூலிக்கும் உரிமையை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது.
சாலைப் பணியாளர்களின் 41 மாத வேலைநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரசாரப் பயணம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை புதுக்கோட்டைக்கு சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆர். தமிழ் தலைமையில் வந்த பிரசாரக் குழுவினர் பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி, மாவட்டச் செயலர் மாயழகு, பொருளாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரக் குழுவினரை அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர். ரெங்கசாமி, மாவட்டத் தலைவர் கே. நாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், ஆலங்குடி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் நடைபெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com