"தாட்கோ மூலம் சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும்'

தாட்கோ நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி சுய தொழில் தொடங்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.

தாட்கோ நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி சுய தொழில் தொடங்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமுக்குத் தலைமை வகித்து, தாட்கோ தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மானிய விலையில் வங்கிக் கடன் உதவியுடன் ரூ. 6,38,234 (மானியம் ரூ. 1,91,470) மதிப்பில் நான்கு சக்கர சரக்குந்து வாகனத்தை வழங்கி ஆட்சியர் பேசுகையில், தாட்கோ மூலம் சுயதொழில் செய்ய செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
மேலும், இயற்கை மரணம் அடைந்த சத்துணவு திட்டப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும், 2 பேருக்கு  மாற்றுத்திறனாளி மாதந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
முன்னதாக, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டாவுக்காக 15 பேரும், பட்டா மாறுதல் கோரி 5 பேர், புதிய குடும்ப அட்டைக்காக 5, காவல்துறை நடவடிக்கைக்காக 25, வேலைவாய்ப்பு வேண்டி 35, பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி வேண்டி 25, கல்வி உதவித்தொகை கேட்டு 15, முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகைக்காக 25, ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 10, இதர கோரிக்கைகளுக்காக 163 பேர் அளித்த மனுக்கள் உள்பட மொத்தம் 323 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கைக்காக ஆட்சியர் ஒப்படைத்தார்.
தாட்கோ திட்டத்தின் மூலம் மானிய விலையில் கடன் பெற்று சரக்குந்து பெற்ற பயனாளி பழனியப்பன் கூறியது:
அறந்தாங்கி வட்டம், சுனையக்காடு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தினமும் வாடகைக்கு சரக்குந்து வாகனம் இயக்கி வந்ததன் மூலம் மாதம் ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை கிடைக்கும் வருமானத்தில் சிரமத்துடன் குடும்பத்தை நடத்தி வந்தேன்.
இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான தாட்கோ மூலம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தேன்.
அதைத்தொடர்ந்து, தாட்கோ தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் மானிய விலையில் 4 சக்கர சரக்குந்து வாகனத்தை வங்கிக் கடனுதவியின் மூலம் வழங்கியுள்ளனர். சொந்தமாகத் தொழில் செய்வதன் மூலம் எனக்கு மாதம் ரூ. 35 ஆயிரம் வரை வருமானம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதில் எனக்கு மானியமாக வழங்கிய ரூ. 1,91,470 போக மீதமுள்ள வங்கிக் கடனை விரைவில் அடைத்துவிடமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com