குடுமியான்மலையில்பசுமை குடில் அமைத்த விவசாயிக்கு உதவித்தொகை

விவசாயிகள் பசுமைக்குடில் காய்கறி சாகுபடி மேற்கொண்டால் 50 சதவீதம் மானியம் மற்றும் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.

விவசாயிகள் பசுமைக்குடில் காய்கறி சாகுபடி மேற்கொண்டால் 50 சதவீதம் மானியம் மற்றும் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலை ஸ்டாமின் கலையரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பசுமைக்குடில் தோட்டக்கலை பயிர் சாகுபடி கருத்தரங்கில் பங்கேற்று ஆட்சியர் மேலும் பேசியது:
இந்தியாவில் 130 மில்லியன் டன் காய்கறிகள் விளைகின்றபோதிலும், உலக சுகாதார நிறுவனத்தின் (நபருக்கு 300 கிராம்) பரிந்துரையைக் காட்டிலும் காய்கறி நுகர்வு மிகக் குறைவாகவே (நபருக்கு 210 கிராம் ) உள்ளது. ஆண்டு முழுவதும் தட்ப வெப்பநிலை அனைத்து இடங்களிலும் ஒரே சீராக இருப்பதில்லை. இந்நிலையை போக்க குறைந்த பரப்பில் அதிக அளவு காய்கறிகள் உற்பத்தி செய்ய பசுமைக்குடில் அவசியமாகும். இக்குடிலில் சூரிய ஒளி, மழை மற்றும் பனிப் பொழிவு போன்ற வானிலை காரணிகளை கட்டுப்படுத்தி பருவமற்ற காலங்களிலும் தரமான காய்கறி உற்பத்தி செய்யலாம். புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பசுமைக் குடிலில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி கருத்தரங்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பசுமைக் குடில் அமைத்த 2 விவசாயிகளுக்கு ரூ.13,57,500 லட்சம் மதிப்பில் மானிய நிதியுதவித் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.மேலும், இக்கருத்தரங்கில் தோட்டக்கலை விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், பசுமைக் குடிலில் வெள்ளரி மற்றும் தக்காளி சாகுபடி முறைகள், நவீன தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம், பசுமைக்குடில் வடிவமைப்பு முறை, நிழல்வலை கூடத்தில் காய்கறி சாகுபடி முறை ஆகியவை குறித்து விளக்கமாக எடுத்துரைப்பதுடன் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடலும் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 3300 ச.மீ அளவில் விவசாயிகள் மானியத்தில் பசுமைக்குடில் அமைத்து சாகுபடி செய்து வருகின்றனர் என்றார். கருத்தரங்கில் தோட்டக்கலைத் துணை இயக்குநர் அருணாச்சலம், ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் ராஜகோபால், விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com