குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
பிறகு அவர் கூறியது: நமது மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியம், திருப்புனவாசல் ஊராட்சி, கண்ணமங்கலம் பாம்பாற்றில் வறட்சி நிவாரண நிதியின் கீழ், ரூ. 21.60 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு, கரூர் ஊராட்சி, விளாங்காட்டூரில் வறட்சி நிவாரண நிதியின் கீழ், ரூ. 17 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு ஆகியன ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், செங்கானம் ஊராட்சி, பேயாடிகோட்டையில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியும் பார்வையிடப்பட்டது. கண்ணமங்கலம் பாம்பாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் திருப்புனவாசல், செங்கானம் மற்றும் புத்தாம்பூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 6,123 பொதுமக்கள் பயன்பெறுவர். இதேபோல, விளாங்காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மூலம் கரூர், பொன்பேத்தி மற்றும் காவாத்துக்குடி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 7000 பொதுமக்கள் பயன்பெறுவர்.
ஆய்வின்போது, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் தொட்டி, மோட்டார் அறை மற்றும் குடிநீர் குழாய்களை அமைக்கும் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்யவும், சீமைக்கருவேல மரங்களை அடியோடு அகற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
முன்னதாக, தீயூர் ஆவணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவை ஆட்சியர் சாப்பிட்டு ஆய்வு செய்தார். அதோடு, மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வில், திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், அறந்தாங்கி கோட்டாட்சியர் பி.வி. சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com