நபார்டு - பண்ணை மேம்பாட்டுத் திட்டம்: மழையூரில் பாரம்பரிய கருஞ்சீரகச்சம்பா நெல் அறுவடை

புதுகை மாவட்டம், மழையூர் அருகேயுள்ள மங்கான்கொல்லைப்பட்டியில் நபார்டு பண்ணை மேம்பாட்டுத் திட்டம் மூலம் மீட்டெடுக்கப்பட்டு வரும்

புதுகை மாவட்டம், மழையூர் அருகேயுள்ள மங்கான்கொல்லைப்பட்டியில் நபார்டு பண்ணை மேம்பாட்டுத் திட்டம் மூலம் மீட்டெடுக்கப்பட்டு வரும் வாசனை மிகுந்த பாரம்பரிய நெல் ரகமான கருஞ்சீரகச்சம்பா நெல் அறுவடைப்பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நவீன நெல் ரகங்கள், செயற்கை வேளாண்மை யுக்திகள் நிறைந்த தற்போதைய வேளாண் சூழலில்,வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியை நபார்டு வங்கியுடன் இணைந்து,ரோஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ரோஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஏ. ஆதப்பன் இதுகுறித்து கூறியது:
நபார்டு வங்கியின் பண்ணை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுகை விவசாயிகள் மத்தியில் மருத்துவ குணம் வாய்ந்த, பாரம்பரிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி பரவலாக்கும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம், வாசனை தரக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த கருப்புக்கவுனி, துளசி வாசனை சீரகச்சம்பா, கருஞ்சீரகச்சம்பா, கொத்தமல்லிச்சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் 30 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராகியுள்ளது என்றார்.
நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அதிகாரி எஸ். சோமசுந்தரம் இதுகுறித்து கூறியது: பண்ணை மேம்பாட்டு திட்டத்தின் மூலம்  பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதுடன்,அதற்கான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் கடைப்பிடித்து, நஷ்டமில்லாத விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து,மங்கான்கொல்லைப்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயி சண்முகம், வீரையா ஆகியோர் வயலில் ஒற்றை நெல் முறையில் 2 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கருஞ்சீரகச் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் அறுவடை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை, ரோஸ் நிறுவன திட்டப்பொறுப்பாளர்கள் விஜயா, அனிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com