2 ஆவது நாளாக சாலை மறியல்: சத்துணவு ஊழியர்கள் 188 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 151 பெண்கள் உள்பட மொத்தம் 188 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 151 பெண்கள் உள்பட மொத்தம் 188 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கோரிக்கைகள்: ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் குடும்பப் பாதுகாப்புடன் கூடிய சட்டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் காலிப்பணியிடங்களில் பணி உயர்வு வழங்க வேண்டும். மாணவர் உணவு செலவுத் தொகையை ரூ.5 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 12 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். 5 ஆண்டு பணி முடித்த தகுதியுள்ள சமையலர், உதவியாளர்களை அமைப்பாளராக பணி உயர்வு வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்துக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 21,22,23 ஆகிய 3 நாட்கள் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, 2 ஆவது நாளில், புதுகை பழைய பேருந்து நிலையம் அருகில்  மாவட்ட தலைவர் எஸ். காமராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற,  நிர்வாகிகள் ஏ. மலர்விழி, பெ. அன்பு, வெ. அன்னபூர்ணம், கு. ராஜமாணிக்கம், செல்லத்துரை, நளாயினி, மாநிலச் செயலர் கு. சக்தி, பொருளர் துரை அரங்கசாமி, 151 பெண்கள் உள்பட மொத்தம் 188 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com