டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தகுதிக்கேற்ப அரசுத் துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள்

தகுதிக்கேற்ப அரசுத் துறைகளில் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் (ஏஐடியுசி) சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்:டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில்  அரசால் அறிவிக்கப்படும் மது விலக்கு நாள் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்கள் 29.11.2003 முதல் நிரந்தரம் செய்யப்படவில்லை. தமிழ்நாடு நிரந்தரத் தகுதியளிக்கும் சட்டம் 1982-ன் படி 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். இந்நிலையில், 2016-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு,  படிப்படியாக மாநிலம் முழுவதும் ஆயிரம் மதுக்கடைகளை மூடியது. மாவட்டத்தில் மொத்தம் 22 கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளின் ஊழியர்கள் (மாவட்டத்தில் 80 பேர்) காலியாக இல்லாத பிற மதுக்கடைகள், மாவட்ட,மண்டல அலுவலகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வரும் ஆண்டுகளில்  சுமார் 15 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, டாஸ்மாக் பணியாளர்களுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசின் பிற துறைகளில் காலிப் பணியிடங்களில் நியமித்து வேலை இழப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்.
  புதுகை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவர் பா. செளந்தரராஜ் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கே.ஆர். சுப்பிரமணியன், ஏ. சகாயராஜ், எம். முருகேசன், ஜெ. பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான என். பெரியசாமி பங்கேற்று தொடக்க உரையாற்றினார்.  ஏஐடியுசி நிர்வாகிகள் த. செங்கோடன், வீ. சிங்கமுத்து,கே.ஆர்.தர்மராஜன், ஏனாதிராசு, மாவட்டச் செயலர் ப. ஜீவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com