கந்தர்வகோட்டையில் சேவை மையக் கட்டடம் பயன்பாட்டுக்கு வருமா?

கந்தர்வகோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் ரூ. 27 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வட்டார ஊராட்சி சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது.

கந்தர்வகோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் ரூ. 27 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் வட்டார ஊராட்சி சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பூட்டியே உள்ளது.
தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு தேவையான ஜாதி சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு சான்று, முதல் பட்டதாரி சான்று, அரசு உதவித்தொகை பெறுதல் உள்ளிட்டவைகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே பெற்று கொள்ளும் வகையில் அதற்கான சேவை மையக் கட்டடங்களை ஒவ்வொரு ஊராட்சியிலும் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டியது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளிலும் இதுபோல் கட்டடம் கட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் ஆண்டுக்கணக்கில் பூட்டியே கிடக்கின்றன.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com