100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

வெங்கடேஸ்வரா பள்ளி 100% தேர்ச்சி
எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில்  புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வெழுதிய 52 மாணவர்கள், 42 மாணவிகள் உள்பட மொத்தம் 94 பேரும் தேர்ச்சிப் பெற்றனர்.  சமூக அறிவியலில் 31 பேரும், கணிதம், அறிவியலில் தலா ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
மேலும், 500 -க்கு 481 முதல் 493 வரை 12 பேரும், 470 முதல் 480 வரை 11 பேரும், 450 முதல் 470 வரை 22 பேரும், 400 முதல் 450 வரை 35 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சமூக அறிவியல் பாடத்தில் 31 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்க உதவிய ஆசிரியர் ஜெயசுதாவுக்கு ரூ. 31 ஆயிரமும், கணக்கு, அறிவியல், பிறபாடங்களின் ஆசிரியர்களுக்கும் பள்ளி முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி ரொக்கப்பரிசளித்து வாழ்த்தினார்.
பள்ளி மேலாண்மை இயக்குநர் தங்கநிவேதிதா, துணை முதல்வர் குமாரவேல், பள்ளியின் ஆலோசகர்கள் த. அஞ்சலிதேவி கருப்பையா, அய்யாவு, ஸ்டீபன்சேகர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி என். கணேஷ், கல்வியாளர்கள் பி. ரவிச்சந்திரன், எம்.எஸ். ரவி,ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

அரிமளம் சிவகமலம் பள்ளி 100% தேர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்திலுள்ள ஸ்ரீ சிவகமலம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வில் 100 சதத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து (12) மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் தலா 2 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தனர். இவர்களை பள்ளியின் நிறுவனரும் தலைவருமாகிய ப. தங்கவேல், தாளாளர் சபரிதங்கவேல் ஆகியோர் வாழ்த்தினர்.

கந்தர்வகோட்டை வித்யாவிகாஸ் பள்ளி 100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் கந்தர்வகோட்டை வித்யா விகாஸ் பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியின் என். கயல்விழி, யு. புவன்நிதி  டி.என். இளம்பிறை ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். கணிதத்தில் 4 பேரும், அறிவியலில் 5 பேரும், சமூக அறிவியலில் 37 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 470 மதிப்பெண்களுக்கு மேல் 51 பேரும், 450-க்கு மேல் 54 பேரும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை பள்ளி நிர்வாக இயக்குநர்கள் சிங்காரவேல், குணசேகரன், முத்துசாமி, இராமலிங்கம், செயல் அறங்காவலர்கள் பாஸ்கரன், மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டினர். பள்ளியின் நிர்வாக அலுவலர் சதாசிவன், பள்ளி முதல்வர்கள் மதனகோபால், சரவண ஐயப்பன், அன்னபூரணிபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com