புதுகையில் 96.16% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.16 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (94.46)  1.70 % கூடுதல் ஆகும்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.16 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட (94.46)  1.70 % கூடுதல் ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 12,460 மாணவர்கள், 12,801 மாணவிகள் என மொத்தம் 24,541 பேர் எழுதினர். அவர்களில் 12,130 மாணவர்கள், 11,469 மாணவிகள் உள்பட மொத்தம் 23,599 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்தத் தேர்ச்சி 96.16 %.
73  மெட்ரிக், தனியார்
பள்ளிகள் 100% தேர்ச்சி
புதுகை மவுன்ட்சீயோன் மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மேல்நிலைப்பள்ளி, விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜகோபாலபுரம் வைரம்ஸ் பள்ளி, எஸ்.எப்.எஸ். மேல்நிலைப்பள்ளி, கைக்குறிச்சி ஏடிஆர்- மெட்ரிக் பள்ளி, நேரு, பி.எஸ்.கே பள்ளி, சிவபுரம் கற்பகவிநாயகா மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ பாரதி மேல்நிலைப்பள்ளி, குரும்பக்காடு லாரல் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி வெஸ்ட்லி, கிரசென்ட், செலக்சன் மேல்நிலைப்பள்ளி,  ஏ.எம். நாச்சியார் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி ஹோலிகிராஸ், மாடர்ன் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ சுபபாரதி மேல்நிலைப்பள்ளி, வடகாடு தங்கம், அரிமளம் ஸ்ரீ சிவகமலம், அம்மாபட்டினம் கிரசென்ட் பள்ளி,மேட்டுச்சாலை மதர்தெரசா பள்ளி, கந்தர்வகோட்டை வித்யாவிகாஸ், அருள்மாரி, பொன்மாரி வித்யாலயா பள்ளி, பொன்னமராவதி அமலஅன்னை பள்ளி, லயன்ஸ், சிதம்பரம் மேல்நிலைப்பள்ளி, குளத்தூர் முத்துசுவாமி வித்யாலயா ஆகிய பள்ளிகள் உள்பட மொத்தம் 73 பள்ளிகள்.

63 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி
மாவட்டத்திலுள்ள 129 அரசுப்பள்ளிகளில் வாகவாசல் வார்ப்பட்டு, கோமாபுரம், உப்பிலிக்குடி, கீழாநிலைக்கோட்டை, அமரடக்கி,  சிலட்டூர்,  கே. ராசியாமங்கலம், அரிமளம், கோட்டைப்பட்டினம்,மதியநல்லூர், மாங்காடு, அம்மாபட்டினம், கொத்தமங்கலம், அரையப்பட்டி, வெண்ணாவல்குடி, புதுகை சந்தைப்பேட்டை, முன்மாதிரிபள்ளி, குளத்தூர், சத்தியமங்கலம், குடுமியான்மலை, மேலூர், காமராஜபுரம் நகராட்சிப் பள்ளி, கிருஷ்ணாஜிபட்டினம், அரசர்குளம், இடையாத்திமங்கலம், அம்புக்கோவில் பள்ளத்திவிடுதி அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் புதுகை திருஇருதய மகளிர் பள்ளி, செயின்ட்மேரீஸ் பள்ளி உள்பட மொத்தம் 63 பள்ளிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com