சீருடைப் பணியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு: 8,938 பேர் பங்கேற்பு

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வில் 8,938 பேர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வில் 8,938 பேர் பங்கேற்றனர்.
தமிழக காவல் துறையில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆம் நிலை காவலர், சிறைக் காவலர் (ஆண், பெண்), தீயணைப்பாளர் பதவிகளில் காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) மாநிலம் முழுவதும் 32 மையங்களில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கைக்குறிச்சி பாரதி மகளிர் கல்லூரி, வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, புதுகை மாலையீடு பகுதியில் உள்ள மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,862 பேருக்கு அழைப்புக் கடிதம் இணையதளம் மூலம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், 8,938 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1,924 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு நடைபெற்ற மையங்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் ஏ. அருண், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ. லோகநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  
தேர்வில் பங்கேற்க வசதியாக புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள 4 தேர்வு மையங்களுக்கும் காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வு மைய பாதுகாப்புப் பணிகளில் சுமார் 600 போலீஸார் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com