கொத்தமங்கலத்தில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரியகுளத்தின் கரையில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுக்கவும், பனை மரங்களை பாதுகாக்கவும் கொத்தமங்கலம் ஊராட்சி நிர்வாகம், அப்பகுதி விவசாயிகள் சார்பில் குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்யும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினர். இதுகுறித்து விவசாயிகள் சங்கச்செயலர் ந.துரைராஜ் கூறியதாவது:
புதுகை மாவட்டத்தில், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அணவயல், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இப்பகுதியில் ஆற்றுப்பாசனம் ஏதும் கிடையாது. ஏரி, கண்மாய், குளங்கள், ஆழ்துளை கிணறுகளை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக புதுகை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால், நீராதாரமின்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழைநீரை சேமிக்கும் வகையில் குளக்கரையை மண் அரிப்பில் இருந்து காக்கவும், தமிழகத்தின் அடையாளமான பனை மரங்களை பாதுக்காக்கவும் ஊராட்சி நிர்வாகம், விவசாயிகள் இணைந்து கொத்தமங்கலம் பெரிய குளக்கரையில் 3 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்கிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் மகேஷ் மயில்வாகணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், நீர்ப்பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com