கோதண்டராமர் கோயில் திருப்பணி தீவிரம்

கந்தர்வகோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பழையான கோதண்டராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான  திருப்பணிகள் விறுவிறுப்பாக  நடைபெறுகின்றன.

கந்தர்வகோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள பழையான கோதண்டராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான  திருப்பணிகள் விறுவிறுப்பாக  நடைபெறுகின்றன.
இங்குள்ள சீதா லஷ்மண ஹனுமத் ஸமேத கோதண்டராமஸ்வாமி கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும்.  இக்கோயிலில் கடந்த 1970-ல் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில்,
 இக்கோயில் சிற்பங்கள், சுவர்கள், கோயில் கோபுரம், மண்டபம் உள்ளிட்டவை சிதிலமடைந்திருந்தன.
இதையடுத்து கோயில் வழிபாட்டு குழுவினர், ஊர்ப் பொதுமக்கள் கோயிலைச் சீரமைத்து  குடமுழுக்கு  நடத்தத் திட்டமிட்டனர்.
இதையடுத்து இக்கோயிலில் திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து வரும் நவ. 23 (வியாழக்கிழமை) குடமுழுக்கு நடைபெறவுள்ளதாக விழா கமிட்டியினர் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com