சைல்டுலைன் சார்பில் குழந்தைகள் தின விழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும்   சைல்டுலைன் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும்   சைல்டுலைன் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மாவட்டத்தில் இயங்கிவரும் சைல்டுலைன் 1098 அமைப்பு  ஆண்டுதோறும் நவ. 14 முதல் 20-ம் தேதி வரை குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடி வருகிறது. இதில் ஒரு பகுதியாக திருமயத்தில் ஆர்.டி.ஓ- சைல்டுலைன் மூலம்  திருமயம் வட்டாட்சியர் காபிரியேல்சார்லஸ் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் திருமயம் ஆய்வாளர் மனோகரன் பேசினார்.
இதில், ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  அழகிரி, குழந்தைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்  வைரம் ஆகியோர் பேசினர்.  ஆர்.டி.ஓ - சைல்டுலைன் துணை மைய இயக்குநர்  குழந்தைவேலு வரவேற்றார். இதையொட்டி பொதுமக்கள், பேருந்து பயணிகள் அனைவருக்கும் விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.
முன்னதாக ஆர்.டி.ஓ - சைல்டுலைன் மூலம் அரிமளம், திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும், திருவரங்குளத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் குழந்தைகள் தின உறுதியேற்கப்பட்டது. சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் நதியா தொகுத்தளித்தார். ஏற்பாடுகளை ஒன்றிய அளவிலான களப்பணியாளர்கள் வசந்தபாரதி, சுமதி, பூங்கொடி, முனியம்மாள் ஆகியோர் செய்தனர்.
புதுக்கோட்டை சைல்டுலைன் -(1098) சார்பில் ரக்ஷா பந்தன் விழா:
புதுக்கோட்டை சைல்டுலைன் சார்பில்  கொண்டாடப்படும்  குழந்தைகள் தின விழா வார விழாவின்  முதல்  நிகழ்வாக  செவ்வாய்க்கிழமை (14.11.2017) புதுகை உண்டு  உறைவிடப் பள்ளியின் குழந்தைகள் நாடாளுமன்ற அமைச்சரவை (பள்ளி இடைநின்ற மாணவர்கள்) சார்பில் ரக்சா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, குழந்தைகள் நாடாளுமன்ற அமைச்சரவைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், மாவட்ட முதன்மை நீதிபதி டி.வி. தமிழ்ச்செல்வி,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச. செந்திவேல்முருகன்,  மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகாதேவி,  மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலர் ஏ. ராபின்சன்ஜார்ஜ்,   மாவட்ட நன்னடத்தை அலுவலர் ஏ. கணேசன்,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஏ. இளையராஜா, காவல் ஆய்வாளர் பரவாசுதேவன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து   கையில் ராக்கி வில்லை கட்டி அனைவரையும்  சைல்டுலைன்-1098- அமைப்பின் நண்பர்களாக இணைத்துக் கொண்டனர். முன்னதாக மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்   சைல்டுலைன் 1098-ன் உறுதியேற்கப்பட்டது.
இதில், புதுக்கோட்டை சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜோதிராஜ், நிர்வாக அலுவலர் எஸ். மத்தியாஸ், உண்டு உறைவிடப் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com