"42 வார்டுகளிலும் முழு வீச்சில் கொசு ஒழிப்புப் பணி'

புதுகை நகராட்சியின் 42 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்  நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன்.

புதுகை நகராட்சியின் 42 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்  நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டெங்கு பரவுவதை தீவிரமாகத் தடுத்திடும் வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி, வியாழக்கிழமைதோறும் டெங்கு கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதனடிப்படையில்  மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் அந்தந்த அலுவலர்கள் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொண்டு அதன்மூலம் "ஏடிஸ்' கொசுப்புழு உற்பத்தி இடங்கள் அனைத்தும் அழிக்கப்படும்.
 இந்த  வார வியாழக்கிழமை அன்று புதுக்கோட்டை திருமயம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மண்டல தலைமை அலுவலகத்தில்  நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன் தலைமையில் டெங்கு கொசு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் துணை இயக்குநர் பரணீதரன், துப்புரவு ஆய்வாளர்கள் பரக்கத்அலி, பாபு, மணிவண்ணன், துப்புரவு பணியாளர்கள் 50 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையொட்டி கொசு அழிக்கும் இயந்திரம் மூலம் புகை மருந்து தெளிக்கப்பட்டது. வளாகத்திலுள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் கூறுகையில்,  புதுகை நகராட்சியில் வியாழக்கிழமை டெங்குக்கொசு ஒழிப்புப்பணிகள் தொடங்கியுள்ளன. இனிமேல் வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் நகராட்சியின் 42 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப்பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com