கீழையூர் அரசுப் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா

அறந்தாங்கி அருகே கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி அருகே கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.ஜெயமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்கள் கண்ணகி, செந்தில், வடிவு, டெய்சி, இளமதி, கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு ஜூனியர் ரெட்கிராஸ் மாநில பயிற்சி ஆசிரியர் மு.அக்பர் அலி யூசுப் கஸ்ஸாலி பேசுகையில்,  முன்னர் பல நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போர்களில் வரைமுறை இல்லாமல் சண்டை நடைபெற்றது. தற்போது அணுகுண்டுகளும், கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, போர் முறையில் மீறல்கள் இருந்தன. அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து ஜெனீவாவில் போர் நடைபெறும்போது அதற்கான இடைவேளையில் போர்வீரர்கள் காயம் அடைந்தவர்களை காப்பாற்றியும் சிகிச்சை அளிக்கும் முறை போர் காலத்தில் குறிப்பிட்ட நேரம் உள்ளிட்டவைகள் பற்றியும் ஜெனீவாவில் நடைபெற்ற ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இதை தான் நாம் ஜெனீவா ஒப்பந்த நாள் என்று கொண்டாடுகின்றோம் என்றார். முன்னதாக, ஆசிரியர் கோ.சரவணபெருமாள் வரவேற்றார் நிறைவில் ஆசிரியை பி.அகிலா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com