விபத்தில்லா தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட  வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட  வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி உள்கோட்ட காவல்துறை,  பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, பொன்னமராவதி அரிமா சங்கம்,  சிட்டி அரிமா சங்கம், ராயல் அரிமா சங்கம்,  பாலகுறிச்சி பிரைடு அரிமா சங்கம், சிட்டி லியோ சங்கம், ராயல் அரிமா சங்கம் மற்றும் பொன்.புதுப்பட்டி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியன இணைந்து நடத்திய பேரணிக்கு அரிமா சங்கத்தலைவர் என்ஏ.பாஸ்கரன் தலைமை வகித்தார்.
தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) மோ.அழகு, ராயல் அரிமா சங்கத் தலைவர் எம்.சந்திரன், சிட்டி அரிமா சங்க முதல் துணைத்தலைவர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னமராவதி காவல் ஆய்வாளர் ஆர்.கார்த்திகைசாமி பேரணியை தொடங்கி வைத்தார். புதுப்பட்டி பிடாரி கோயில் அருகே தொடங்கிய பேரணி அண்ணாசாலை, பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வந்து சிவன்கோயில் திடலில் நிறைவடைந்தது.  பேரணியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. அரிமா சங்க நிர்வாகிகள் ஆர்எம்.வெள்ளைச்சாமி, எம்.சண்முகம், டிவிஎஸ்.மீனாட்சிசுந்தரம்,  எஸ்.பிரபு,  டி.பாலசுப்பிரமணியன், அ.தங்கப்பன், அண்ணாமலை, ராமசாமி, கருப்பையா, ரவிச்சந்திரன், முகமது ஹனிபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com