கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம்

கொசு உற்பத்திக்குக் காரணமான இட உரிமையாளர்களுக்கு நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கொசு உற்பத்திக்குக் காரணமான இட உரிமையாளர்களுக்கு நகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், நகராட்சி ஆணையர் (பொ)ஜீவாசுப்ரமணியன் உத்தரவின்படி நகராட்சி அலுவலர்கள், துப்பரவுப் பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பது, குப்பைகளை அகற்றுவது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை புதுகை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள காவலர் குடியிருப்பில் துப்புரவுப்பணியாளர்கள் இயந்திரத்தின் உதவியுடன் கொசு மருந்து அடித்தனர்.
 இந்தப் பணிகளை புதுக்கோட்டை சார்ஆட்சியர் கே.எம். சரயு, நகராட்சி ஆணையர் (பொ)ஜீவாசுப்பிரமணியன், வட்டாட்சியர் அ. செந்தமிழ்க்குமரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதேபோல் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் உத்தரவின்படி , நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விடுதிகள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு கொசு உற்பத்திக்கான காரணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும்  டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த வீடுகளுக்கு தலா ரூ. 1000 -ம்  வீதம் அபராதம் விதித்து வசூல் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் உள்ள திரையரங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ஒரு தனியார் திரையரங்கத்திற்கு ரூ. 25 ஆயிரம் அபராதத்தை விதித்து சார் ஆட்சியர் கே.எம். சரயு உத்தரவிட்டார். இதேபோல் கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ஒரு உணவகத்துக்கும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com