தீபாவளியை முன்னிட்டு கோ-ஆப் டெக்சில் 30% தள்ளுபடி விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுகோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோஆப்டெக்ஸ் முக்கனி விற்பனை நிலையத்தில் 30 சதவீத தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் சு. கணேஷ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுகோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோஆப்டெக்ஸ் முக்கனி விற்பனை நிலையத்தில் 30 சதவீத தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் சு. கணேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் பேசியது: வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளிக்கு 30% தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள் கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள், திருபுவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை முக்கனி விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு ரூ.92.24 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.1.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் கோ-ஆப்டெக்சில் தீபாவளிக்கு தங்களுக்கு தேவையான புத்தாடைகளை வாங்கி நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
இதில், கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் (தணிக்கை) எம்.நிர்மலா, நகராட்சி ஆணையர் (பொ) ஜீவாசுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் (நிர்வாகம்) சி.கருணாகரன், முக்கனி விற்பனை நிலைய மேலாளர் பி.சுப்பிரமணியன், வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com