புதுகையில் நவ.24 -இல் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டு புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3ஆம் தேதி வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை அறிவியல் இயக்கக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தகத் திருவிழாவுக்கான வரவேற்புக்குழுக் கூட்டத்துக்கு வரவேற்புக்குழுத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் புத்தக திருவிழா வரவேற்புக்குழு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புத்தக திருவிழா குறித்து வரவேற்புக் குழுத் தலைவர் தங்கம்மூர்த்தி கூறியது: நிகழாண்டில் புத்தக திருவிழாவில் கூடுதல் அரங்குகள் அமைக்கப்படும். மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளை புத்தகத் திருவிழாவில் உரையாற்ற வைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், புத்தக திருவிழாவை இணைந்து நடத்த மாவட்ட பள்ளிக் கல்விதுறை முன்வந்துள்ளது.
எனவே, புத்தகத் திருவிழா குறித்த செய்திகளை மாவட்டம் முழுவதும் பரவலாகக் கொண்டு செல்வது, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை ஈர்க்கும் வகையில், அவர்களுக்கு உண்டியல் வழங்குவது, சிறப்புத் தள்ளுபடிகளுக்கான டோக்கன் வழங்குவது, மாணவர்களுக்குத் தேவையான புத்தகப் பட்டியலை அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் கொண்டு சேர்ப்பது, அனைத்துப்பள்ளிகளிலும் புத்தக வாசிப்பு இயக்கங்களை நடத்துவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. எனவே, கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடைபெறுவதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் நல்லாதரவு தர வேண்டும் என்றார் தங்கம் மூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com