விராலிமலை தொகுதியில் பள்ளி, வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அன்னவாசல்

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் வியாழக்கிழமை பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அன்னவாசல் பெண்கள் உயர்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.  
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மேலும் பேசியது: அன்னவாசல் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, அன்னவாசல் பெண்கள் உயர்நிலைப்பள்ளி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. 
தமிழகப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்கள் புகார்கள், இடர்பாடுகள் குறித்து 14417 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்,  24 மணிநேரமும் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கலாம். 
மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் அரசின் நலத்திட்ட உதவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் பா. ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com