அதிமுக, அமமுக இணைக்கும்  முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை

அதிமுகவையும், அமமுகவையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என்றார் பாஜக தேசியச்செயலர் எச். ராஜா.

அதிமுகவையும், அமமுகவையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என்றார் பாஜக தேசியச்செயலர் எச். ராஜா.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வேப்பங்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திங்கள்கிழமை நிவாரணப்பொருள்கள் வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:  
அதிமுக - அமமுகவையும் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்தது ஏற்புடையது அல்ல. இந்துமத கோயிலில் வழிபாடு உரிமைக்கு எதிரானது. நீதிமன்றங்கள் இருக்கின்ற சட்டப்படி நிர்வாகம் நடக்கிறதா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது. 5 மாநில தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளிவர உள்ளது. 5-இல் 3 மாநிலங்களில் பாஜக  ஆட்சி அமைக்கும். சட்டத்தின்படி திருமாவளவன் இருக்க வேண்டும். அவர் சமுதாய பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை கூட்டணியில் இருந்து விடுவிக்க ஸ்டாலின் தயாராகிவிட்டார். அதனால் தான் பழியை எங்கள் மீது திருமாவளவன் சுமத்துகிறார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com