இடையாத்தூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: ஆர்டிஓ ஆய்வு

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் வியாழக்கிழமை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை இலுப்பூர் வ

பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் வியாழக்கிழமை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுகை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூர் பொன் மாசிலிங்க அய்யனார் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி, ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி நிகழாண்டு ஜல்லிக்கட்டு வியாழக்கிழமை (பிப்.15) நடைபெற உள்ளது. 
ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கிராம முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு திடல் தயார்படுத்துதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், கண்காணிப்பு அதிகாரிகளுக்கான இடம் அமைத்தல், காளைகள் ஓய்வுக்கூடம், வீரர்களுக்கு குடிநீர் வழங்குவது, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பரிசோதனைக் கூடம், முதலுதவி சிகிச்சை மையம் உள்ளிட்டவைக்கான முன்னேற்பாடுகளை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். 
ஆய்வின்போது, பொன்னமராவதி வட்டாட்சியர் எஸ்.சங்கர், வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா, காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன், கிராம  நிர்வாக அலுவலர் முருகேசன், பாண்டியன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com