இடையாத்தூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம்,  இடையாத்தூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம்,  இடையாத்தூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொன்னமராவதி அருகிலுள்ள இடையாத்தூரில் வியாழக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறஉள்ளது.  இதையொட்டி  ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானப் பகுதிக்குச் சென்ற ஆட்சியர் கணேஷ், அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்தார்.
பார்வையாளர்கள் அமரும் இடம், விழா மேடை, வாடிவாசல், காளைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்யும் இடம், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் இடம், காளைகள் செல்லும் பாதையில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்பு கட்டைகள் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தினார் ஆட்சியர். ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 250-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர் என்பதால் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை  அரசு விதிமுறையின் படி நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் சு.கணேஷ் உத்தரவிட்டார்.கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மோகன், இலுப்பூர் கோட்டாட்சியர் ஜயபாரதி, வட்டாட்சியர் சங்கர், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com