சுகாதாரத் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் பொது சுகாதாரத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் தலைமை வகித்தார். 
கூட்டத்தில், மாவட்ட நலச்சங்கம், குடும்ப நல அறுவை சிகிச்சை தர நிர்ணயம், அரசு அலுவலர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், நோயாளர்  நலச்சங்கம், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ரத்த வங்கி செயல்பாடு, 
காசநோய் திட்டம், தொழுநோய் திட்டம், உணவு பாதுகாப்புத் துறை, சித்த மருத்துவம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள், புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை, குழந்தை பிறப்பு விகிதம், தடுப்பூசி விபரம், 108 அவசர ஊர்தி செயல்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆட்சியர் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தவிர்க்க முடியாத காரணத்தினால் மருத்துவர்கள் விடுப்பு எடுக்கும்போது, முன்கூட்டியே விடுமுறை குறித்த தகவலை துணை இயக்குநருக்கு தெரிவிக்க வேண்டும். 
வேறொரு மருத்துவரை பணியில் அமர்த்தி சிகிச்சை அளிக்க வேண்டும். 
மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டில் மருத்துவக் குழுவினர் மாடுபிடி வீரர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராதிகா, பொது சுகாதார துணை இயக்குநர்கள் பரணிதரன், கலைவாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com