நீட் தேர்வு: சமூக நீதிகோரி மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சமூக நீதி பாதுகாப்பு மாணவர் பேரவையினர் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சமூக நீதி பாதுகாப்பு மாணவர் பேரவையினர் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அறிவொளி, திராவிடர் கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெ. அன்பரசன், மாவட்ட காங்கிரஸ் மாணவரணி அமைப்பாளர் க.திருநாவுக்கரசு, இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் குமாரவேல், விக்னேஷ், முஸ்லீம் லீக் மாணவரணி மாவட்டச் செயலாளர் முகமது ஜவகர்தீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com