அரசுப் பள்ளி முன் ஆபத்தான குடிநீர் தொட்டி

விராலிமலை அருகே அரசு தொடக்கப்பள்ளி முன் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால்

விராலிமலை அருகே அரசு தொடக்கப்பள்ளி முன் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  விராலிமலை ஒன்றியம், ஆவூர் ஊராட்சி செங்களாக்குடியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியறது.60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இத்தொட்டியின் தூண்களும், கீழ்பகுதியிலும் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
எந்நேரமும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டி, அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கிராம ஊராட்சி சேவை மையம், கோயில் ஆகியன உள்ளன.
 பள்ளி மாணவர்கள் பள்ளி இடைவேளை நேரத்தில் தொட்டியின் அருகே இருக்கும் காலிஇடத்தில் விளையாடி வருவதும் கோயில்,
 சேவை மையத்துக்கு வந்து செல்ல பொதுமக்கள் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். 
 எனவே, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், ஊராட்சி நிர்வாகம் புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com