பொன்னமராவதி நகராட்சி அறிவிப்பை செயல்படுத்த  அரசுக்கு வர்த்தகர் கழகம் வலியுறுத்தல்

பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட அறிவிப்பை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என வர்த்தகர் கழகம் வலியுறுத்தியுள்ளது. 

பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட அறிவிப்பை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என வர்த்தகர் கழகம் வலியுறுத்தியுள்ளது. 
பொன்னமராவதி வர்த்தகர் கழக 44வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் வர்த்தகர் கழக மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு பொன்னமராவதி வர்த்தகர் கழகத் தலைவரும், மாவட்ட துணைத் தலைவருமான எஸ்.கே.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார். செயலர் எம்.முகமது அப்துல்லா ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பி.ஏ.எல்.தேனப்பன் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். 
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் உள்ள அமரகண்டான் ஊரணியை தூர்வாரி சுத்தப்படுத்திவதோடு, நடைப்பயிற்சி செய்வோர் பயன்பெறும் வகையில்  நான்குபுறமும் முள்வேலி மற்றும் நடைபாதைச் சாலை ஏற்படுத்தி தர வேண்டும்.
வர்த்தகர்கள் வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி கட்ட ஏதுவாக பொன்னமராவதியில்  அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ஏற்பாடு செய்து தரவேண்டும். 
பொன்னமராவதியில் கிளை நீதிமன்றம், சிறைச்சாலை அமைப்பது, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கட்டிடவசதி, காவலர் குடியிருப்பு கட்டித் தருவது, இரவு 8 மணிக்கு மேல் பொன்னமராவதியிலிருந்து ஆலவயல்  வழியாக திருச்சி, சென்னைக்கும், இரவு 10 மணிக்கு மேல் புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வர பேருந்து வசதி செய்து தரவேண்டும்.
தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, பொன்னமராவதி, சிங்கம்புணரி வழியாக மதுரைக்கும், காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர், பொன்னமராவதி, மணப்பாறை வழியாக கரூர், ஈரோடு, சேலம் செல்வதற்கு ரயில்  பாதை வசதி செய்து தரவேண்டும்.
பொன்னமராவதி தேர்வு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட அறிவிப்பை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.
வட்ட  மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பொன்னமராவதி வலையபட்டி  பாப்பாயி அரசு மருத்துவனைக்கு கூடுதல் மருத்துவர்கள்களை மற்றும் பெண் மருத்துவர்களை நியமிப்பதுடன்,  அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கம், கூடுதல் படுக்கை வசதியை செய்து தர தமிழக அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜி.இளங்கோவன்,  துணைச் செயலர் எம்.ராமசாமி, நிர்வாகிகள் எம்.அருணாச்சலம், எம்.எஸ்.பி.மணிமுத்து, முன்னாள் தலைவர் வேலாயுதம், பொருளாளர் அரு.வே.மாணிக்கவேலு, கருப்பையா, தியாகராஜன், ராமஜெயம், தங்கராஜ், ராமகிருஷ்ணன், பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com