கீழத்தானியம் நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும்

பொன்னமராவதி அருகே உள்ள கீழத்தானியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 ஆம் ஆண்டு விளையாட்டு விழா, ஆண்டு விழா மற்றும் புரவலர்கள் சேர்க்கை விழா என முப்பெரும்விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சே. ராமதிலகம் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ச. லதாதேவி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வெள்ளையம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், விளையாட்டு மற்றும் இலக்கியப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், பள்ளி புரவலர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர்கள் ஆதி ராஜா, சிறப்பு ஆசிரியர் ராஜேஸ்கண்ணா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆசிரியர் ஜெயராஜ் வரவேற்றார். ஆசிரியர் ஜெனன் நிரஞ்சன் நன்றி கூறினார். 
இதேபோல், கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி பரிமாற்றம் நிறைவு விழா, கல்விக் கண்காட்சி, கலை இலக்கிய விழா என முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, சார்- ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கிப் பேசினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.வனஜா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் க.குணசேகரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் திராவிடச்செல்வம். சாமி.சத்தியமூர்த்தி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்  என். செல்லத்துரை உள்ளிட்டோர் பேசினர். பள்ளி தலைமை ஆசிரியை  க.ஜெயலெட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ஸ்டாலின் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com