புதுக்கோட்டையில் 90% கடைகள் அடைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து,  திமுக சார்பில் நடைபெற்ற கடையடைப்பில் புதுக்கோட்டையில் மருந்தகங்கள், சில கடைகளை தவிர மற்ற

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து,  திமுக சார்பில் நடைபெற்ற கடையடைப்பில் புதுக்கோட்டையில் மருந்தகங்கள், சில கடைகளை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்,  இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து  தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள்  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.   இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
 இந்நிலையில், புதுக்கோட்டையில்,  புதிய பேருந்துநிலையம், கீழராஜவீதி, கீழ.2-ம் வீதி,  மேலராஜவீதி,  சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மருந்தகங்கள், சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
 இதேபோல, ஆலங்குடி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அறந்தாங்கியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை:
  பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய கடைகள் வரை பாதியளவிற்கும் மேல் திறந்திருந்தன.  பெட்டிக் கடைகள், டீக்கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள்,  முழுமையாக இயங்கின. சில பெரிய உணவகங்கள் மட்டுமே மூடியிருந்தன.  சிறிய உணவகங்கள் திறந்திருந்தன. மேலும், திருமண முகூர்த்த நாள் என்பதால்,  அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 
நகரில் ஆட்டோக்கள், டாக்ஸி, வேன் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் முழு அளவில் இயங்கின.  முதல் முறையாக வர்த்தக சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு வர்த்தகர்கள் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.  இதனால் நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com