ஆசிரியர் தகுதித் தேர்வு: 7,958 பேர் எழுதினர்

ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் 7,958 பேர் எழுதினர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சனிக்கிழமை நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் 7,958 பேர் எழுதினர்.
மாவட்டத்தில் இத்தேர்வில் முதல் தாளை எழுதுவதற்காக 8,213 பேர் விண்ணப்பம் செய்தனர். இதற்காக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் 20 மையங்கள் அமைக்கப்பட்டன.
இதில், சனிக்கிழமை நடைபெற்ற முதல் தாள் தேர்வை 7,958 பேர் எழுதினர். 255 பேர் வரவில்லை. தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்களை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை பார்வையிட்டார். முதன்மைக் கல்வி அலுவலர் இரெ. திருவளர்செல்வி உடனிருந்தார். இதேபோல, ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் 54 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை எழுதுவதற்காக 21,761 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com