திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் சேவை மே 26 வரை நீட்டிப்பு

திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை மே 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை மே 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - மயிலாடுதுறை - திருச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் சேவை சனிக்கிழமை (ஏப். 29) முதல் மே 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை, மயிலாடுதுறையிலிருந்து சனிக்கிழமை நீங்கலாக இயக்கப்படும்.
மயிலாடுதுறையிலிருந்து பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கும்பகோணத்துக்கு 12.59 மணிக்கும், தஞ்சாவூருக்கு 1.40 மணிக்கும், திருச்சிக்கு 3 மணிக்கும் சென்றடையும். இதேபோல, திருச்சியிலிருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தஞ்சாவூருக்கு மாலை 5.10 மணிக்கும், கும்பகோணத்துக்கு 5.43 மணிக்கும், மயிலாடுதுறைக்கு இரவு 7 மணிக்கும் சென்றடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com