பட்டுக்கோட்டையில் விதைப்பந்து திருவிழா

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விதைகள் அமைப்பு சார்பில் விதைப்பந்து திருவிழா சனிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கியது.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விதைகள் அமைப்பு சார்பில் விதைப்பந்து திருவிழா சனிக்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கியது.
வரும் திங்கள்கிழமை (ஆக.14) காலை 6 மணி வரை தொடர்ந்து 48 மணி நேரம் இடைவேளையின்றி 11,11,111 விதைப்பந்துகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விதைப்பந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களால் தொடக்க நாளான சனிக்கிழமை பிற்பகல் வரை ஆயிரக்கணக்கான விதைப் பந்துகள் தயாரிக்கப்பட்டன.
ஆக. 15-ம் தேதி சுதந்திர தின நாளில் விதைகள் அமைப்பினர் ஒவ்வொரு பகுதியாகச் சென்று விதைப் பந்துகளை சாலையோரம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள், ஏரி, குளக்கரைகளில் போடவும் திட்டமிட்டுள்ளனர். இது தவிர ஊட்டி, கொடக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் விதைப் பந்துகளை வீசுமாறு அப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்வோரிடம் விதைப் பந்துகளை இலவசமாக கொடுத்தனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
மேலும், மரம் வளர்க்க ஆர்வமுள்ள கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களும் விதைப்பந்துகளை இலவசமாகப் பெற்றுச் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com