அதிரையில் ஆற்று நீரை பம்பிங் செய்து குளங்களுக்கு நிரப்பும் பணி தொடக்கம்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆற்று நீரை பம்பிங் செய்து நகரிலுள்ள குளங்களை நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆற்று நீரை பம்பிங் செய்து நகரிலுள்ள குளங்களை நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதற்காக கடந்தாண்டு நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து அதிரையிலுள்ள 8 குளங்களுக்கு நீர் கொண்டு செல்ல சுமார் 1,800 மீட்டர் நீளத்தில் குழாய் பதித்து, 20 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பொருத்தப்பட்டது.
இத்திட்டப் பணிகள் அதிரை பேரூராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 43.50 லட்சத்தில் கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது. இதன்மூலம் அப்போது அதிரையிலுள்ள ஆலடி குளம், செக்கடி குளம் உள்ளிட்ட 8 குளங்களில் நீர் இறைத்து நிரப்பப்பட்டது.
அதேபோல, தற்போது நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இதையடுத்து, சிஎம்பி வாய்க்கால் இணைப்பிலுள்ள செக்கடி குளத்திற்கு நீர் வந்தடைந்தது. சில மணி நேரத்தில் நீர் வரத்து அதிகமானதால் இப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com