முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ். நினைவு நாள்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முன்னாள் அமைச்சரும், அக்கல்லூரியின் நிறுவனருமான எஸ்.டி.எஸ். (எ) எஸ்.டி.சோமசுந்தரத்தின் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முன்னாள் அமைச்சரும், அக்கல்லூரியின் நிறுவனருமான எஸ்.டி.எஸ். (எ) எஸ்.டி.சோமசுந்தரத்தின் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
 இதையொட்டி, கல்லூரியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் வீ.முத்துவேலு தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் அத்தி
ஆர்.ஏ.மாணிக்கம், பட்டுக்கோட்டை சில்க் சிட்டி லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் எம்.மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  எஸ்.டி.எஸ். பள்ளித் தோழரும், போர்வாள் பதிப்பக
ஆசிரியருமான மறைமலையான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மெளன அஞ்சலி செலுத்தினர்.
 இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் கே.பிரவீனுக்கு எஸ்.டி.எஸ். அறப்பணி அறக்கட்டளை சார்பில் ரூ.10,000 கல்வி உதவித்தொகையும், திறன்
மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் பயிலும் 48 மாணவர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. மேலும், எஸ்.டி.எஸ். அறக்கட்டளை, பட்டுக்கோட்டை சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண்
மருத்துவமனை ஆகியன இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தின. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 348 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 54 பேர்
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 
 இதேபோல், பட்டுக்கோட்டை கே.பி. மருத்துவமனை,  அரசு மருத்துவமனை, சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம், கல்லூரியின் என்எஸ்எஸ், என்சிசி, ஜெஆர்சி அமைப்புகள், ரோட்டராக்ட் சங்கம்,  ஜே.சி.ஐ.
சங்கம் ஆகியன இணைந்து ரத்த தான முகாமை நடத்தின. இதில், மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் என 70 பேர்  ரத்த தானம் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com