காணாமல்போன மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி  அதிரையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் துயரத்திற்கு நீதி வழங்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிகாரம்  அமைப்பின் பட்டுக்கோட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். வட்டார நிர்வாகி நடராஜன் முன்னிலை வகித்தார்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் முரளி, வழக்குரைஞர் ஜெயபாண்டியன், வேதாரண்யம் வட்டார ஒருங்கிணைப்பாளர் தனியரசு, மாநிலப் பொருளாளர் காளியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 
ஒக்கி புயல் காரணமாக கரை சேராத மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவ மக்களை தமிழக முதல்வர் உடனடியாக நேரில் சென்று சந்திக்க வேண்டும். போராடியவர்கள் மீது வழக்குப் போடுவதை கைவிட வேண்டும். 
ஒக்கி புயலில் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 25 லட்சம்,  ஒருவருக்கு அரசு வேலை, சேதமான படகுக்கு நிவாரணம் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com