ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சிப் பணி ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தென்னமநாடு, கண்ணந்தங்குடி மேற்கு ஆகிய கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட

தஞ்சாவூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தென்னமநாடு, கண்ணந்தங்குடி மேற்கு ஆகிய கிராமங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் தென்னமநாடு ஊராட்சி மேலத்தெருவில் ஊராட்சி பொது நிதி ரூ. 6 லட்சத்தில் நீர்தேக்கத் தொட்டிக்கு, ஆழ்குழாய் கிணறும், புதிய மின் மோட்டார் புதிதாக அமைக்கப்பட்டிருப்பதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் அத்தெருவில் மழை நீர் செல்லும் கால்வாயைத் தூர்வாரவும் அறிவுறுத்தினார். தென்னமநாடு ஊராட்சி நடுத்தெருவில் பிரதம மந்திரியின் அவாஜ் யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெறும் வீடுகள், தனி நபர் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார்.
வீட்டின் உரிமையாளரிடமிருந்து நியாயவிலைக் கடையில் வழங்கிய விலையில்லா 20 கிலோ அரிசியை வாங்கிப் பரிசோதித்தார்.
மேலும், அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு ஆகியவை முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார். வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தென்னமநாடு கால்வாயில் 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ. 1,87,000 மதிப்பீட்டில் நீர் உறிஞ்சு உறை கிணறு மற்றும் கருங்கல் தடுப்பு அமைப்பைப் பார்வையிட்டு அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் கால்வாயில் மேல்புறத்தைச் சீர்செய்ய அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள தென்னமநாடு தீர்த்தக்குளத்திலும், கண்ணந்தங்குடி இளந்தகுளத்திலும் விவசாயப் பயன்பாட்டுக்கு மண் அள்ளப்படுவதையும் ஆய்வு செய்து, 3 அடிக்கு மேல் மண் எடுக்கக்கூடாது, கரைகளையும், நீர் வரத்து கால்வாயை சீர் செய்யவும் உத்தரவிட்டார். ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை சாலையில் வடசேரி நியாய விலைக் கடைகளுக்கு அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் ஆகியவற்றை ஏற்றிச் சென்ற லாரியைச் சோதனையிட்டு, டிரிப் சீட்டில் உள்ளவாறு பொருட்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார்.
கண்ணுக்குடி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் நிதியாண்டில் ரூ. 19.31 லட்சத்தில் கண்ணங்குடி - திருமங்கலகோட்டை வரை போடப்பட்டுள்ள தார்ச் சாலையின் தரத்தை ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஊராட்சித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com