சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் பேரணி

தஞ்சாவூரில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூரில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணி காந்திஜி சாலை, அண்ணாசிலை, பழைய பேருந்து நிலையம், கீழ வீதி வழியாக அரசர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தைச் சென்றடைந்தது.
இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும், போதைப்பொருள் உட்கொள்வதால் மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளையும் ஏந்தி சென்றனர். மேலும், போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு முழக்கங்களையும் எழுப்பினர். இப்பேரணியில் அவர் லேடி நர்சிங் கல்லூரி, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, அரசுத் தொழிற் பயிற்சி நிலையம் ஆகியவற்றைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புக் காவல் படையினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சி. சுரேஷ், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ். கண்ணன், உதவி ஆணையர் (கலால்) இன்னாசிமுத்து, வட்டாட்சியர் தங்கபிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com