அள்ளூர், கள்ளப்பெரம்பூர் ஏரிகளை தூர்வார எம்எல்ஏ வலியுறுத்தல்

அள்ளூர், கள்ளப்பெரம்பூர் ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.

அள்ளூர், கள்ளப்பெரம்பூர் ஏரிகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அவர் அளித்த மனு:
திருவையாறு வட்டத்தில் உள்ள அள்ளூர் ஏரி 102 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் அள்ளூர், அரசக்குடி, தென்பெரம்பூர், பனவெளி, ஆற்காடு ஆகிய கிராமங்களில் 526 ஏக்கர் விவசாய நிலத்துக்குப் பாசன ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரி தூர்ந்து, கரைகள் பலம் இழந்துவிட்டன. நீரின் கொள்ளளவும் குறைந்து வருகிறது. எனவே, இந்த ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, வடிகாலை சீர் செய்தால் சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, இப்பணிக்கு முன்னுரிமை அளித்து ஏரி முழுவதையும் நிகழாண்டே தூர்வார வேண்டும்.
கள்ளப்பெரம்பூர் ஏரி சுமார் 640 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம் ராயந்தூர், கள்ளப்பெரம்பூர் 1-ம் சேத்தி, 2-ம் சேத்தி, தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், களிமேடு, பள்ளியேறி உள்ளிட்ட கிராமங்களில் 2,620 ஏக்கர் நிலம் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியும் தூர்ந்து பலம் இழந்து வருவதுடன், நீர் கொள்ளளவும் குறைந்து வருகிறது.
இந்த ஏரியையும் தூர்வாரி, சீர்படுத்த நடவடிக்கை எடுத்தால் சிறந்த பறவைகள் சரணாலயமாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, இப்பணிக்கும் முன்னுரிமை அளித்து ஏரி முழுவதையும் தூர்வார வேண்டும்.
திருக்காட்டுப்பள்ளி கூடநாணல் கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். அய்யனாபுரம் வாரியில் வெண்டையம்பட்டி அருகே தடுப்பணைக் கட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com