பேரூராட்சியில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பேரூராட்சிப் பகுதிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி அலுவலகங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சிப் பகுதிகளில் நூறு நாள் வேலை வழங்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரூராட்சி அலுவலகங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சிக்கும், ஊராட்சிக்கும் வேறுபாடு இல்லை. பேரூராட்சியில் வசிப்பவர்களுக்கும் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை வழங்க வேண்டும். இந்தியாவில் ஒடிசா மற்றும் தமிழ்நாட்டில் மட்டும்தான் பேரூராட்சிகள் உள்ளன. மற்ற மாநிலங்களில் இல்லை. எனவே, மற்ற மாநிலங்களைப் போல சமமாக 100 நாள் வேலை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டி விண்ணப்பப் படிவங்களை நிரப்பி 800-க்கும் அதிகமானோர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கினர்.  ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ராம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாபநாசத்தில்..... இதேபோல், பாபநாசம் பேரூராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.எம். காதர்உசேன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
போராட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.கே.ஆர். இளங்கோவன், கே. சங்கர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் பி. விஜயாள் உள்பட 30 பெண்கள் உள்ளிட்ட 40 பேர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் நா. மனோகரனிடம் மனு கொடுக்கப்பட்டது.
கும்பகோணம் வட்டத்தில்... இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராசுரம் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர குழு நிர்வாகி ஆ.செல்வம் தலைமை வகித்தார். நகர செயலாளர் பி.பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னைபாண்டியன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நகர குழுவைச் சேர்ந்த தனபால், செந்தில்குமார், அறிவுராணி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதேபோல், சுவாமிமலை பேரூராட்சி அலுவலகம் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com