இரட்டை இலை சின்னம் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும்: வைத்திலிங்கம் பேச்சு

இரட்டை இலை சின்னம் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.

இரட்டை இலை சின்னம் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும் என்றார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம்.
தஞ்சாவூரில் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:
இரட்டை இலை சின்னம் ஒரு வாரத்தில் கிடைத்துவிடும். சட்டப்பேரவைத் தேர்தல் நாளைக்கே நடைபெற்றால் கூட அதிமுகதான் வெற்றி பெறும்.
ஜெயலலிதா தனக்குப் பிறகு யாரையும் வாரிசு என அறிவிக்கவில்லை. உண்மையாக இருப்பவர்களைத் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வர் என்பதால், வாரிசுதாரரை அவர் அறிவிக்காமல் விட்டுவிட்டார்.
ஏமாந்த நேரத்தில் ஏற்றம் பெற்றுவிடலாம் என நினைக்கும் யாருக்கும் இந்த இயக்கத்தைச் சொந்தமாக்க விடமாட்டோம் என்றார் வைத்திலிங்கம்.
கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து தமிழ்நாட்டின் ஒரே வலுவான இயக்கம் அதிமுகதான் என்பதை மீண்டும் நிரூபிக்க சபதம் ஏற்பது, தஞ்சாவூரில் நவ. 29-ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழகமே வியந்து பார்க்கும் விதமாக சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்டப்பேரவை உறுப்பினர்கள் சி.வி. சேகர் (பட்டுக்கோட்டை), மா. கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட பால் வளத் தலைவர் ஆர். காந்தி, அதிமுக பகுதிச் செயலர்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூர்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புபடுத்தக் கூடாது:
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், வரி ஏய்ப்பவர்கள், வரி செலுத்தாதவர்கள் மீது வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்வது சுதந்திரம் பெற்ற காலம் முதல் நடைபெற்று வருகிறது.
இப்போது நடைபெறும் வருமான வரித் துறையினரின் சோதனையை யாருடனும் தொடர்புப்படுத்திப் பேசக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com